
தன்னுடைய எழுத்து பத்திரிக்கையின் வாயிலாக பல எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், நாடக ஆசிரியர்களையும் உருவாக்கிய சி.சு.செல்லப்பா அவர்கள் எழுத்து பத்திரிக்கையை ஒரு விமர்சன இதழாகத்தான் தொடங்கினார். ஆனால் அது புது கவிதை என்ற ஒரு புதிய கவிதை இயக்கத்தை தோற்றுவித்தது. எழுத்துப் பத்திரிக்கையினால் உத்வேகம் பெற்ற பல இளைஞர்கள், விமர்சனங்கள், நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள் எழுதத்தொடங்கினார்கள். தமிழில் ஒரு புதிய இயக்கம் தோன்றியது. கூத்துப்பட்டறையும் அந்த உத்வேகத்தில் தோன்றிய ஒரு அமைப்புதான். அவருடைய சிறுகதைகளை படிக்கத் தொடங்கிய நடிகர்கள் அவருக்கு நன்றிக்கடனாக முறைப்பெண்னை மேடையேற்றலாம் என்று தொடங்கினார்கள். இனி அவருடைய சிறுகதைகளையும், கதை சொல்லாக மேடையேற்ற இருக்கிறார்கள்.
|